Download App

“இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா 2” வருது… ஆனா சுமார் மூஞ்சி குமார் இல்லை !

November 20, 2025 Published by anbuselvid8bbe9c60f

balakumara

2013-ல் வெளியான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா தமிழ் சினிமாவின் மறக்க முடியாத காமெடி கிளாசிக். விஜய் சேதுபதியின் “சுமார் மூஞ்சி குமார்” கேரக்டரும், “குமுதா ஹேப்பி அண்ணாச்சி” வசனமும் ரசிகர்களை இன்றும் சிரிக்க வைக்கின்றன. இயக்குநர் கோகுலின் முழு காமெடி ட்ரீட்மென்ட் படத்தை மாபெரும் வெற்றியாக்கியது.

தற்போது அதே கோகுல் இதன் இரண்டாம் பாகத்தை இயக்க தயாராகி வருகிறார். ஆனால் மிகப்பெரிய அதிர்ச்சி – விஜய் சேதுபதி இதில் நடிக்கவில்லை! அவருக்கு பதிலாக சாண்டி மாஸ்டர் முக்கிய ரோலில் (சுமார் மூஞ்சி குமார் கேரக்டரிலேயே?) நடிக்க உள்ளதாக தகவல்கள் பரவி வருகின்றன.

balakumara1

ரசிகர்கள் கடும் ஏமாற்றமும் கோபமும் அடைந்துள்ளனர். “விஜய் சேதுபதி இல்லாமல் பாலகுமாராவா?” என்று சமூக வலைதளங்களில் புலம்புகிறார்கள். இன்னும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரவில்லை என்பதால், இது உறுதியாகுமா அல்லது மாறுமா என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்!