Download App

‘பராசக்தி’ செகண்ட் சிங்கிள்: “என் கேரியரிலேயே சிறந்த பாடல்” – ஜிவி பிரகாஷ் உற்சாக அறிவிப்பு!

November 20, 2025 Published by anbuselvid8bbe9c60f

gvp

சிவகார்த்திகேயனின் ‘பராசக்தி’ படத்தின் செகண்ட் சிங்கிள் விரைவில் வெளியாகவுள்ளது. இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது ட்விட்டரில், “என் கேரியரிலேயே சிறந்த பாடல்களில் ஒன்று இது” என்று கூறி ரசிகர்களை உற்சாகப்படுத்தியுள்ளார். இது அவரது 100வது படம் என்பதால் #GV100 என்ற ஹேஷ்டேக்கையும் சேர்த்து பதிவிட்டுள்ளார். சுதா கொங்கரா இயக்கத்தில், 1960-களில் நடந்த இந்தி எதிர்ப்புப் போராட்டத்தை மையமாகக் கொண்ட இப்படத்தில் அதர்வா, ஸ்ரீலீலா, ரவி மோகன் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏற்கனவே வெளியான ஃபர்ஸ்ட் சிங்கிள் ‘அடி அலையே’ பெரும் வரவேற்பைப் பெற்ற நிலையில், செகண்ட் சிங்கிள் எப்போது வரும் என்ற எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. படம் 2026 பொங்கல் (ஜனவரி 14) திரையரங்குகளில் வெளியாகிறது.