‘ஹார்ட் பீட்’ நவீன் திருமணம் – ரசிகர்கள் வாழ்த்து மழை!
December 11, 2025 Published by anbuselvid8bbe9c60f

ஜியோ ஹாட்ஸ்டாரில் கடந்த இரு ஆண்டுகளாக பட்டையைக் கிளப்பி வரும் பிரபல வெப் சீரிஸ் ‘ஹார்ட் பீட்’ன் மூன்றாவது சீசன் அடுத்த ஆண்டு வெளியாகவுள்ள நிலையில், சீரிஸின் முக்கிய கதாபாத்திரமான நவீனாக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்து வரும் நடிகர் ராம் இப்போது திருமணப் பந்தத்தில் கால் பதித்திருக்கிறார்.
விஜய் டிவியின் ‘ஆஹா கல்யாணம்’ சீரியலிலும் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களிடம் பரிச்சயமான ராம், தனது திருமணத்தை நெருங்கிய உறவினர்கள் & நண்பர்கள் மத்தியில் நேற்று நடத்தி முடித்துள்ளார். திருமண விழாவில் எடுக்கப்பட்ட அழகிய புகைப்படங்கள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றன.
புகைப்படங்களைப் பார்த்த ரசிகர்கள், “நவீன் கல்யாணம் ஆகிடுச்சே! கொஞ்சம் ஷாக் தான் ”, “வாழ்த்துகள் ராம் அண்ணா! என்றும் சந்தோஷமா இருங்க”, “ஹார்ட் பீட் சீசன் 3-க்கு முன்னாடியே ஹார்ட் ஃபிக்ஸ் ஆகிடுச்சு” என வாழ்த்துகளையும் நக்கல்களையும் குவித்து வருகின்றனர்.
புதுமணத் தம்பதிகளுக்கு ‘ஹார்ட் பீட்’ ரசிகர்கள் சார்பாகவும் மனமார்ந்த வாழ்த்துகள்!























