Download App

கார்த்தியின் 26வது படம்: ‘வா வாத்தியார்’ – எம்.ஜி.ஆர் பற்றிய நெகிழ்ச்சியான பேச்சு!

December 9, 2025 Published by Natarajan Karuppiah

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான நடிகர் கார்த்தி, தனது 26வது படமாக உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படத்தை முடித்துள்ளார். இப்படத்தின் ரிலீஸுக்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கும் நிலையில், படம் குறித்தும், தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்தின் பின்னணியாக இருந்த காலத்தால் அழியாத ஆளுமை குறித்தும் கார்த்தி பேசியுள்ள கருத்துக்கள் மிகுந்த கவனத்தைப் பெற்றுள்ளன.

‘சூது கவ்வும்’, ‘காதலும் கடந்து போகும்’ போன்ற வித்தியாசமான வெற்றிகளைத் தந்த இயக்குநர் நலன் குமாரசாமி இப்படத்தை இயக்கியுள்ளார். இதனால், வழக்கமான பாணியில் இருந்து விலகி, ஒரு புதுமையான படைப்பாக ‘வா வாத்தியார்’ இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து, கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ராஜ் கிரண், ஆனந்த் ராஜ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

சந்தோஷ் நாராயணன்; தயாரிப்பு: ஸ்டூடியோ கிரீன் ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு, தனது தனித்துவமான இசையால் ரசிகர்களைக் கவர்ந்த சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வரும் டிசம்பர் 12-ம் தேதி திரைக்கு வரவுள்ளது.

எம்.ஜி.ஆர் – ஒரு கடல், ஒரு எமோஷன்!

படத்தைப் பற்றி பேசிய நடிகர் கார்த்தி, தான் ஏற்று நடித்த கதாபாத்திரத்துக்காக எம்.ஜி.ஆரைப் பற்றி தெரிந்துகொள்ள முயன்றபோது கிடைத்த அனுபவத்தைப் பற்றி நெகிழ்ச்சியுடன் பகிர்ந்துள்ளார்.

இந்தப் படம் நடிக்க ஒப்புக்கொண்டபிறகு கேரக்டருக்குள்ள போலாம்னு முடிவு பண்ணியாச்சு. உள்ள போனா, எம்.ஜி.ஆர் ஒரு பெரிய கடல் மாதிரி அவ்ளோ விஷயம் கிடைக்கிது. அவரைப்பற்றி பேசினாலே புல்லரிக்குது.”

இன்னைக்கும் நீங்க அவர் ரசிகர்கள் வீட்டுக்குச் சென்றால், அவருடைய புகைப்படத்தை பார்க்க முடியும். அதுக்கு பொட்டு வச்சு, மாலை போட்டு சாமியா கும்பிட்டுட்டு இருப்பாங்க. அப்படி ஒரு பெரிய ஐகான். அவர் வெறும் நடிகர் இல்ல, அவர் ஒரு எமோஷன், ஒரு தனி சகாப்தம்.”

எம்.ஜி.ஆர் அவர்களின் தாக்கம் சினிமா, அரசியல் மற்றும் தனிமனித வாழ்வில் ஏற்படுத்திய மாற்றங்கள் குறித்து கார்த்தி வியந்து பேசினார்:

சவாலான வாழ்க்கை: “அவர் வாழ்க்கையில சந்திக்காத கஷ்டமே கிடையாது. தமிழ் சினிமா, தமிழ்நாட்டு அரசியல்னு அவர் மாற்றம் கொண்டுவந்த விஷயங்கள் நிறைய இருக்கும். எத்தனையோ பேர் வாழ்க்கையை மாற்றியிருக்கார்.”

நல்ல பழக்கங்கள்: “அவர் ரசிகர்களுக்கு நல்லதை மட்டுமே சொல்லியிருக்கார். என் ரசிகனும் என்னைப்போல இருக்கணும்னு வாழ்ந்திருக்கார். அவரோட ரசிகர்களுக்கு குடி, சிகரெட்னு எந்தக் கெட்டப்பழக்கமும் இருக்காது.”

“எப்படி இவ்வளவு இன்ஃப்ளுவன்சியலா இருந்திருக்க முடியும்னு ரொம்ப ஆச்சரியமா இருக்கு.”எம்.ஜி.ஆர் மீதான பிரமிப்பையும் மரியாதையையும் கார்த்தியின் இந்த பேச்சுகள் வெளிப்படுத்துகின்றன. ‘வா வாத்தியார்’ திரைப்படம், இந்த மாபெரும் ஆளுமையின் ரசிகர்களை எப்படி திருப்திபடுத்தப் போகிறது என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.