ஜீவா நடிக்கும் புதிய படத்தின் தலைப்பு ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ (ஜியோ)!
தை 5, 2026 Published by anbuselvid8bbe9c60f

நடிகர் ஜீவாவின் பிறந்தநாளை முன்னிட்டு அவரது 47வது படத்தின் தலைப்பு வெளியிடப்பட்டுள்ளது. இயக்குநர் எம். ராஜேஷ் இயக்கத்தில் உருவாகும் இப்படத்துக்கு ‘ஜாலியா இருந்த ஒருத்தன்’ (சுருக்கமாக ஜியோ – JIO) என தலைப்பிடப்பட்டுள்ளது.
‘சிவா மனசுல சக்தி’ படத்துக்குப் பிறகு கிட்டத்தட்ட 17 ஆண்டுகளுக்குப் பின் ஜீவா, ராஜேஷ், இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா ஆகிய மூவரும் இணையும் இப்படம் ரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இது ‘சிவா மனசுல சக்தி 2’ அல்ல என்றாலும், அதே வைப் – நகைச்சுவை, காதல், உணர்வுகள் கலந்த புத்துணர்ச்சியான என்டர்டெய்னராக இருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.
துபாயில் எடுக்கப்பட்ட வேடிக்கையான ப்ரோமோ வீடியோவில் ஜீவாவும் ராஜேஷும் ஷேக் உடையில் தோன்றி யுவனை சந்திக்கிறார்கள். இலையராஜா காப்பிரைட் இஷ்யூ, LCU போன்றவற்றை கிண்டல் செய்யும் விதமாகவும், படத்தின் ஜாலி தன்மையை வெளிப்படுத்தும் வகையிலும் இந்த வீடியோ உருவாகியுள்ளது. பரிதாபங்கள் சுதாகர் உள்ளிட்டோரும் கேமியோவாக தோன்றியுள்ளனர்.
லிக் ஸ்ட்ரீம்ஸ் கார்ப்பரேஷன் தயாரிக்கும் இப்படத்தின் ஒளிப்பதிவை எம். சுகுமார் கையாள, எடிட்டிங்கை அஷிஷ் ஜோசஃப் பொறுப்பேற்றுள்ளார். படப்பிடிப்பு தீவிரமாக நடந்து வரும் நிலையில், விரைவில் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கதாநாயகி உள்ளிட்ட மற்ற நடிகர்கள் விவரங்கள் இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. ‘சிவா மனசுல சக்தி’ போல மற்றொரு நினைவுச்சின்ன படமாக இது அமையும் என ரசிகர்கள் உற்சாகமாக கொண்டாடி வருகின்றனர்!






















