ஒரே நாளில் பிறந்த நாள் கொண்டாடிய நடிகை இயக்குனர்
October 17, 2025 Published by Natarajan Karuppiah
ஜீ ஸ்டுடியோ மற்றும் ட்ரம்ஸ்டிக் புரொடக்ஷன்ஸ் சார்பில், வெடிக்காரன்பட்டி S சக்திவேல் மற்றும் உமேஷ் குமார் பன்சால் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரவீன் S விஜய் இயக்கத்தில், கீர்த்தி சுரேஷ் மற்றும் மிஷ்கின் நடிப்பில் உருவாகும் படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.
நடிகை கீர்த்தி சுரேஷ் மற்றும் இப்படத்தின் இயக்குநர் பிரவீன் S விஜய் இருவருக்கும் இன்று ஒரே நாளில் பிறந்த நாள் என்பதால் படக்குழுவினருடன் இருவரும் கேக் வெட்டி கொண்டாடினர். படக்குழுவினர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்தனர்.























