Download App

KH 237: கமல் ஹாசனின் 237-வது படம் – மலையாள டீம் இணைந்து பரபரப்பு அப்டேட்!

November 7, 2025 Published by anbuselvid8bbe9c60f

KamalHaasan

நடிகரும் இயக்குநருமான கமல் ஹாசன் அவரது பிறந்தநாள் ஸ்பெஷலாக, 237-வது திரைப்படத்தின் (KH 237) தொழில்நுட்ப குழுவினரை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்! இந்த அப்டேட் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. கடந்த ஆண்டு வெளியான அதிகாரப்பூர்வ அறிவிப்புக்குப் பிறகு, இப்போது படத்தின் முதற்கட்டப் பணிகள் பரபரப்பாக நடந்து வருகின்றன. மலையாள சினிமாவின் திறமையான பிரபலங்கள் இந்த டீமில் இணைந்திருப்பது, படத்திற்கு புதிய உயிர் புகுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.

KamalHaasan 1

பிறந்தநாள் கொண்டாட்டம்

கமல் ஹாசனின் பிறந்தநாள் முன்னிட்டு, அவரது கிளாசிக் படம் நாயகன் திரையரங்குகளில் ரீ-ரிலீஸ் ஆகியுள்ளது. சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு நண்பர்கள், ரசிகர்கள் திரளாக வந்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்த மகிழ்ச்சியான சூழலில் வெளியான KH 237 அப்டேட், ரசிகர்களுக்கு சிறந்த பரிசாக அமைந்துள்ளது.

KamalHaasan 2

தொழில்நுட்ப குழு அறிவிப்பு

இந்த படத்தின் இயக்குநர்களாக ஸ்டன்ட் இயக்குநர்கள் அன்பறிவ்  தனது முதல் இயக்கப் பணியில் இணைகிறார். திரைக்கதை பணிகளை மலையாள சினிமாவின் முன்னணி திரைக்கதையாசிரியர் ஷ்யாம் புஷ்கரன் கவனித்து வருகிறார். ஆஷிக் அபு, திலீஷ் போத்தன் போன்ற இயக்குநர்களுடன் இணைந்து பல ஹிட் படங்களுக்கு திரைக்கதை எழுதியவர் ஷ்யாம். கும்பளங்கி நைட்ஸ் போன்ற படங்களின் கதையாசிரியரான இவர், KH 237 மூலம் கோலிவுட்டுக்கு (தமிழ் சினிமா) என்ட்ரி தருகிறார்!

KamalHaasan 3
  • இசையமைப்பு: ஜேக்ஸ் பிஜோய் – மலையாளம், தமிழ், தெலுங்கில் சமீபத்தில் தூள் கிளப்பும் இசையமைப்பாளர். இந்த ஆண்டில் லோகா, துடரும், நரிவேட்டை படங்களுக்கு சூப்பர் ஹிட் டிராக்குகளை அளித்தவர். தெலுங்கில் சரிபோதா சனிவாரம்க்கு இசை கொடுத்து சென்சேஷனாக உள்ளார்.
  • ஒளிப்பதிவு: சுனில் கே.எஸ்.ஆடு ஜீவிதம் படத்தின் மூலம் தென்னிந்திய சினிமாவில் கவனம் ஈர்த்தவர்.
  • படத்தொகுப்பு: ஷிமீர்
  • கலை இயக்கம்: வினேஷ் பங்லன்லக்கி பாஸ்கர், லோகா போன்ற படங்களுக்கு அழகிய செட்கள் அமைத்தவர்.
KamalHaasan 4

மலையாள சினிமாவின் திறமையான தொழில்நுட்ப குழுவினர் இணைந்திருப்பதால், KH 237 ஒரு பான்-இந்திய அளவில் புதுமையான படமாக உருவெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த அப்டேட் கமல் ஹாசனின் பிறந்தநாளை இன்னும் சிறப்பாக்கியுள்ளது. படத்தின் முழு கasting அறிவிப்பு விரைவில் வரலாம் என தெரிகிறது.

மேலும் செய்திகளுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்!