Download App

4 வருடம் போராடியும் நீதி கிடைக்கவில்லை.. விஜய்யை தேடி சென்ற  ஜாக்டோ – ஜியோ அமைப்பு..!

June 14, 2025 Published by Natarajan Karuppiah

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வந்தவுடன் பழைய ஓய்வூதிய திட்டம் உள்பட ஆசிரியர்களின் அனைத்து கோரிக்கைகளும் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளிக்கப்பட்டது. ஆனால் திமுக ஆட்சிக்கு வந்த பின் தமிழக முதல்வரை ஜாக்டோ ஜியோ அமைப்பின் குழுவினர் பலமுறை சந்திக்கும் கடந்த நான்கு ஆண்டுகளில் அந்த வாக்குறுதி இன்னும் நிறைவேற்றப்படவில்லை.

இந்த நிலையில் விரைவில் ஜாக்டோ ஜியோ அமைப்பினர் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்த இருக்கும் நிலையில் இந்த போராட்டத்திற்கு ஆதரவு திரட்ட தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய்யை சந்தித்துள்ளனர். விஜய்யும் அவர்களுடைய போராட்டத்திற்கு தனது முழு ஆதரவு தருவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து தமிழகவெற்றி கழகத்தின் சமூக வலைதள பக்கத்தில் கூறி இருப்பதாவது:

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் அவர்களை ஜாக்டோ – ஜியோ அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் தோழர் திரு. அ.மாயவன் (நிறுவனத் தலைவர், தமிழ்நாடு உயர்நிலை – மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழகம்) அவர்கள் தலைமையிலான நிர்வாகிகள் சென்னை பனையூரில் உள்ள கழகத்தின் தலைமை நிலையச் செயலகத்தில் நேற்று மாலை சந்தித்து பேசினர்.

அந்த சந்திப்பில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு திமுக அளித்த தேர்தல் வாக்குறுதிகளான பழைய ஓய்வூதிய திட்டம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை செயல்படுத்தாமல், கடந்த நான்காண்டுகளாக திமுக அரசு ஏமாற்றி வருவதை கண்டித்தும் அதை உடனடியாக செயல்படுத்த தொடர்ச்சியாக வலியுறுத்தியும் வரும் ஜாக்டோ – ஜியோ அமைப்பினருக்கு தமது முழு ஆதரவை அளிப்பதாக வெற்றி தலைவர் அவர்கள் தெரிவித்தார். இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.