Download App

அன்று போலிஸ் இன்று தப்பியோடிய குற்றவாளி!

வைகாசி 26, 2025 Published by anbuselvid8bbe9c60f

அமெரிக்காவின் ஆர்கன்சாஸ் மாகாணத்தில் கொலை மற்றும் பாலியல் வன்முறை குற்றங்களுக்காக பல பத்தாண்டு கால சிறைத் தண்டனை பெற்ற  முன்னாள் காவல் அதிகாரி ஒருவர் நேற்று சிறையிலிருந்து தப்பி விட்டதாக அதிகாரப் பூர்வமான தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஆர்கன்சாஸ்- மிஸௌரி எல்லையில் உள்ள சிறிய நகரமான கேட்வே என்ற இடத்தில் பணிபுரிந்த முன்னாள் தலைமை காவல் அதிகாரி க்ராண்ட் ஹார்டின், 2017ல் பல குற்றங்களுக்காக சிறைத் தண்டனை பெற்றவர். காலிக்கோ ராக்கில் வடக்கு மத்தியப் பிரிவில்  சிறையில் அடைக்கப் பட்டிருந்த அவர் அங்கிருந்து தப்பியுள்ளார். 
59 வயதான ஜேம்ஸ் ஆப்பிள்டன் என்பவரை  சுட்டுக் கொன்ற வழக்கில் ஹார்டின் 2017 அக்டோபரில் கொலை குற்றத்தை ஒப்புக்கொண்டார். வழக்கில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணங்களின் படி, ஆப்பிள்டன் கேட்வே குடிநீர் வாரியத்தில்  பணிபுரிந்தவர்.  2017, பிப்ரவரி 23 அன்று அவரது மைத்துனரான அப்போதைய கேட்வே மேயர் ஆண்ட்ரூ டில்மேனுடன்  தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தபோது,   தலையில் சுடப்பட்டார். அவரது சடலம் ஒரு காரிலிருந்து மீட்கப் பட்டது.
2016ஆம் ஆண்டு தொடக்கத்தில் நான்கு மாதங்கள் கேட்வே பகுதியில் தலைமை காவலராக பணிபுரிந்த ஹார்டின் இந்த கொலைக்காக 30 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றார். அது மட்டுமல்ல, 1997 ஆண்டு ஃபயட்வில் பகுதியில் ரோஜர்ஸ் என்ற பள்ளி ஆசிரியையை பாலியல் வன்முறை செய்த குற்றத்திற்காக 50 வருட சிறைத் தண்டனையும் அவருக்கு விதிக்கப் பட்டிருந்தது. இந்த ஆபத்தான கைதி சிறையிலிருந்து தப்பியது பெரும்பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 
” அமலாக்கத் துறை அதிகாரி போல வேடமணிந்து அவர் வடக்கு மத்தியப் பிரிவுச் சிறையிலிருந்து அவர் தப்பி சென்றதாக’ தகவல் வெளியாகி உள்ள நிலையில் உள்ளூர், மாநில, மற்றும் மத்திய சட்ட அமலாக்கத் துறை நிறுவனங்களுடன் இணைந்து தேடுதல் முயற்சிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன.
 

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.