Download App

விஜய் சேதுபதி மீண்டும் வில்லனாக! விஜய் தேவரகொண்டா படத்தில் ரூ.20 கோடி சம்பளம்?

December 12, 2025 Published by anbuselvid8bbe9c60f

vjs1

தமிழ் சினிமாவின் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, ஹீரோவாகவும் வில்லனாகவும் பட்டையை கிளப்பும் நடிகர்களில் ஒருவர். கடந்த சில ஆண்டுகளாக வில்லன் வேடத்தில் தலைகாட்டாத அவர், இப்போது பெரும் அதிரடி அறிவிப்புடன் திரும்புகிறார்!

தெலுங்கு நட்சத்திரம் விஜய் தேவரகொண்டா – கீர்த்தி சுரேஷ் ஜோடியாக நடிக்கும் புதிய பான்இந்திய படத்தில் விஜய் சேதுபதி பவர்ஃபுல் வில்லனாக கமிட்டாகியுள்ளார். இயக்குநர் ரவி கிரண் இயக்கும் இந்தப் படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு ஏற்கெனவே நிறைவடைந்த நிலையில், தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளது. இதில் விஜய் சேதுபதி இன்று முதல் இணைந்துள்ளார்.

இதுவரை இல்லாத அளவுக்கு அதிரடி தகவல்: இப்படத்தில் நடிப்பதற்காக விஜய் சேதுபதி வெறும் 20 நாட்கள் கால்ஷீட் மட்டுமே ஒதுக்கியுள்ள நிலையில், ரூ.20 கோடி சம்பளம் பெற்றுள்ளாராம்! அதாவது ஒரு நாளைக்கு ரூ.1 கோடி என்ற கணக்கில் தமிழ் சினிமாவின் டாப் நடிகர்களையே பின்னுக்குத் தள்ளும் சம்பளம்!

vjs

விஜய் சேதுபதியின் கேரக்டர் ரகசியமாக வைக்கப்பட்டுள்ள நிலையில், “இதுவரை யாரும் பார்த்திராத கொடூரமான வில்லத்தனம்” என்று படக்குழு தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

விரைவில் இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மக்கள் செல்வனின் வில்லன் அவதாரத்தை ரசிகர்கள் ஆவலுடன் எதிர்நோக்குகின்றனர்!

Trending Now