Download App

திருமண ஆண்டு விழா அன்று ”அதிர்ஷ்டம்” அளித்த பரிசு..!

வைகாசி 29, 2025 Published by anbuselvid8bbe9c60f

மிச்சிகனைச் சேர்ந்த ஒரு தம்பதி, தங்கள் திருமண ஆண்டு விழா அன்று, சேர்ந்து அமர்ந்து, வாங்கிய லாட்டரிச் சீட்டை உரசிப் பார்த்த போது… நம்பமுடியாமல் திகைத்தனர்- அவர்களுக்கு 20 இலட்சம் டாலர் பரிசு கிடைத்திருந்தது. 
ஓக்லாண்ட் மாவட்டத்தைச் சேர்ந்த 44 வயது பெண், தனது மணநாள் கொண் டாட்டம் அபர்ன் ஹில்ஸில் உள்ள லாட்டரிச் சீட்டுக் கடையில் டயமண்ட்ஸ் அண்ட் கோல்ட் ஸ்க்ராட்ச் ஆஃப் லாட்டரிச் சீட்டு வாங்கியதோடு ஆரம்பமானது “என்று மிச்சிகன் லாட்டரி அதிகாரிகளிடம் கூறினார். 
”எனக்கும் என் கணவருக்கும் லாட்டரிச் சீட்டு, அதுவும் குறிப்பாக  டயமண்ட்ஸ் அண்ட் கோல்ட் சீட்டுகளை வாங்குவதில் மிகுந்த விருப்பம் உண்டு. எங்கள் திருமண ஆண்டு நினைவு நாளில் நானும் என் கணவரும் சீட்டை உரசிப் பார்த்த போது எங்கள் கண்களையே நம்பமுடியவில்லை. என் கணவர் அதை ஸ்கேன் செய்வதற்காக கடைக்குக் கொண்டு சென்றார்” என்றார்.
”லாட்டரி அலுவலகத்திலிருந்து எங்களுக்கு செய்தி வந்த போது, நான் வெட வெட என நடுங்க ஆரம்புஇத்தேன். 20 லட்சம் டாலர் பணம்! பரபரப்பாகி விட்டோம். இது மறக்கமுடியாத மணநாள்” என்றார்.
லாட்டரியில் பணம் வென்ற தம்பதி, ’தாங்கள் ஒரு வீடு வாங்க போவதாகவும்,  குழந்தைகளின் எதிர்கால படிப்புச் செலவுக்காக ஒரு பகுதியை ஒதுக்கி வைத்து விட்டு மிச்சமிருப்பதை சில  முதலீடுகள்  செய்யப் போவதாகவும் கூறினர்.

தம்பதியருக்கு வாழ்த்து சொன்ன லாட்டரி கமிஷனர் சுஸன்னா ஸ்க்ரெலி,  ‘திருமண நினைவு நாளன்று அவர்களுக்கு கிடைத்த  பரிசு அவர்கள் வாழ்வில் மறக்க முடியாததாக இருக்கும் என்பதும், அந்த தொகை அவர்கள் குழந்தைகளுக்கு பயனுள்ள விதத்தில் உதவ இருப்பதும் தமக்கு மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக’க் கூறினார். 

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.