Download App

மெக்சிகோவின் தவோவில் கேட்கும் மர்ம சத்தம்!

ஆனி 5, 2025 Published by anbuselvid8bbe9c60f

அழகான பாலைநில காட்சிகள் சூழ்ந்த அமைதியான வண்ண மயமான நகர் ஒன்றில் வசிப்பதாக கற்பனை செய்து கொள்ளுங்கள். அந்த நிசப்த இனிமையில்  ஹ்ஹ்ஹ்ம்ம்ம்ம்..”என்ற தொடர்ச்சியான ஒரு மர்ம ஒலி கேட்டுக் கொண்டே இருப்பதை கற்பனை செய்ய முடியுமா உங்களால்? இது தாவோ பகுதியில் கற்பனை அல்ல..நிஜம். நியூ மெக்ஸிகோவில் அமைந்த தாவோ பகுதியில் தாழ்ந்த அதிர்வலையில் தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும் ஹம்மிங்’ பல ஆண்டுகளாக உள்ளூர் மக்களையும், அங்கு வரும் நிபுணர்களையும் திணறடிக்கிறது. ”தாவோ’வின் ஹம்” என்றழைக்கப்படும் இந்த மர்ம ஒலி கணக்கில்லாத அறிவியல் விளக்கங்களுக்குள் அடங்காமல் விஞ்ஞானிகளை தலையைச் சொறிய வைக்கிறது.
ஆனால், இதை இன்னும் அதிக மர்மமாக்குவது எது தெரியுமா? இந்த ஒலி ஒரு சிலர் காதுகளுக்கு மட்டும் தான் கேட்கிறதாம். நம்ப முடிகிறதா உங்களால்? தூரத்தில் வரும் டீஸல் எஞ்சினின் சத்தம் போல இருப்பதாக சொல்லப்படும் இந்த சத்தம், கவிமனம் படைத்த சிலரால், “ அது காதுகளால் அல்ல.. அதையும் தாண்டி உணர்வுகளால் உணரக் கூடிய ஓசை” என்று வருணிக்கப் படுகிறது. 
இன்னும் நுட்பமன ஒரு அம்சம் என்னவென்றால் இது எந்த திசையிலிருந்து வருகிறது என்று கணிக்கவே முடியாது என்றும், காதுகளை மூடினாலும் அந்த ஓசை மறைவதில்லை என்றும் சொல்கிறார்கள். இந்த ஓசையை உணர முடிந்தவர்களால் இதற்குத் தப்பி எங்கும் செல்லமுடியாது.
இந்த ஓசையைப் பற்றிய செய்தி பொதுமக்களிடத்தில் பரவியது 1900களில் என்றாலும், அது பன்னெடுங்காலமாகவே கேட்பதாக பலரும் கூறுகின்றனர். ஆனால், நகரமக்களில் வெறும் 2% பேரால் மட்டுமே இந்த ஓசையை கேட்கமுடிகிறது என்பது தான் சுவாரஸ்யமான விஷயம். ஒரே நகரத்தில் ஒரு சிலர் மட்டும் தொடர்ச்சியாக கேட்டுக் கொண்டே இருக்கும் ஓசை மற்றவர்களுக்குக் கேட்பதில்லை என்றால், இதை நீங்கள் எப்படி அழைப்பீர்கள்?
இது பற்றிய செய்திகள் பரவத் தொடங்கிய போது விஞ்ஞானிகளும், ஆராய்ச்சியாளர்களும் வந்து கூடி இந்த மர்மத்தின் ஆழத்தைக் காண முயன்றனர். நியூ மெக்ஸிகோ பல்கலைகழகம் இந்த ஓசையின் பிறப்பிடத்தைக் கண்டுபிடிக்க பல ஆய்வுகளை மேற்கொண்டது. மிக நுட்பமான கருவிகளை பயன்படுத்தியும் யாராலும் இந்த ஓசையை பதிவு செய்ய முடியவில்லை
ஆம். பல வருட கண்காணிப்புகள், ஆராய்ச்சிகள், விவாதங்களுக்குப் பிறகும், தாவோ’வின் ஹம்மிங்,  காற்றின் மொழி போல,  காலம் கடந்த புதிராக, தாவோ நகரை ஆட்சி செய்கிறது. 
நீங்கள் எப்போதாவது நியூமெக்ஸிகோவிற்குச் செல்ல  நேர்ந்தால், தாவோவில் இறங்கி நின்று கண்களை மூடி கேட்டுப் பாருங்கள். யாருக்குத் தெரியும்? ஒருவேளை ”தாவோவின் ஹம்” உங்கள் காதுகளிலும் கேட்கலாம்.
 

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.