Download App

அலப்பறை செய்து அபராதம் கட்டிய சீனர்!

வைகாசி 26, 2025 Published by anbuselvid8bbe9c60f

சீனாவில் பொழுது போக்கிற்காக மீன் பிடிக்கும் ஒருவர் தான் பிடித்த ராட்சச மீனை தன் காரில் தொங்க விட்டபடியே அலப்பறை செய்ததற்காக அபராதத்திற்கு ஆளாகியுள்ளார்.
தென்மேற்கு சீனாவிலுள்ள குவாங்சி ஜுவாங் நகரின் அருகேயுள்ள அபிங்டியான்ஷான் ஏரியில் பொழுது போக்கிற்காக தூண்டிலை வீசிய ஒருவருக்கு 35 கிலோ எடையுள்ள பிரம்மாண்டமான மீன் ஒன்று கிடைத்தது.
பெரிய மீன் கிடைத்த மகிழ்ச்சியில் திளைத்த அந்த நபர் தான் பிடித்த ராட்சச மீனை நகரில் அனைவருக்கும் காட்ட நினைத்தார். அதற்காக அந்த மீனை மீன் பிடி கயிறில் கட்டி  காரில் தொங்கவிட்டவாறு நகரை பலமுறை வலம் வந்தார். ஏற்கனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த அந்த பகுதியில் இதனால் அதிகமான போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
சீன சட்டத்தின்படி ஒரு காரில் பத்து கிலோவுக்கும்  அதிகமான எடையுள்ள பொருட்களை தொங்க விடக்கூடாது, ஆனால் மேற்படி நபர் 35 கிலோ மீனை காரில் தொங்க விட்டபடி நகரை பலமுறை சுற்றி வந்தது போலீசாரின் கவனத்தை ஈர்த்தது.அதிக எடையுள்ள மீனை தொங்க விட்டது போக போக்குவரத்து நிறைந்த சாலைகளில் பலமுறை அங்கும் இங்குமாக அவர் காரை ஓட்டி வந்தது குற்றமாகவும் பொது மக்களுக்கு இடைஞ்சல் தரும் செயலாகவும் கருதப்பட்டது. மேற்படி மீனவரை விரட்டிப் பிடித்த காவல்துறையினர் மேற்படி மீனவருக்கு அபராதம் விதித்துடன், அவரது ஓட்டுனர் உரிமத்தின் தர மதிப்பெண்களில் பதினைந்து புள்ளிகளை குறைப்பதாகவும் அறிவித்துள்ளனர். பிடித்த மீனை காரில் கட்டிக் கொண்டு அலைந்தவர் இப்போது அபராதம் கட்டுவதற்காக அலைந்து கொண்டிருக்கும் அந்த நபரின் பெயரை சீன காவல்துறை ரகசியமாக வைத்துள்ளது என்ற போதிலும் மீனை கட்டிக்கொண்டு போகும் அவரது காரின் படம் ஊரெங்கும் வைரலாகியுள்ளது.

 

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.