Download App

கல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது! கண் திருஷ்டியிலிருந்து தப்பிக்க மாந்த்ரீகர் சொல்லும் எளிய வழிகள்!

June 21, 2025 Published by anbuselvid8bbe9c60f

சென்னை: ஆன்மீககிளிட்ஸ் நேயர்களுக்கு வணக்கம். கண் திருஷ்டி ஒரு மனிதனை எப்படி பாதிக்கும் மற்றும் அதிலிருந்து விடுபட என்ன செய்ய வேண்டும் என்பது குறித்து மாந்த்ரீகர் N.N. சந்திரசேகர் அவர்கள் ஆன்மீகக்ளிட்ஸ்க்கு அளித்த பேட்டியில் விரிவாகப் பேசினார். அவரது கருத்துக்களின் தொகுப்பு இதோ:

கண் திருஷ்டி – ஒரு பெரிய பாதிப்பு:

கண் திருஷ்டி ஒரு மனிதனை பெரிய அளவில் பாதிக்கும். நீங்கள் புதிதாக பைக், கார் வாங்கினாலும், நல்ல ஆடம்பரமாக உடை அணிந்தாலும், அதை ஸ்டேட்டஸில் போடுவது தவறு. அது உங்களுக்கே சூனியம் வைத்துக்கொள்வது போல. எல்லார் கண்ணும் ஒரே மாதிரி இருக்காது. அது உங்களை வீழ்த்த ஒரு எளிதான வழி.

கண் திருஷ்டியிலிருந்து தப்பிக்க எளிய வழிகள்:

கண் திருஷ்டி ஏற்பட்டால் நாட்டு மருந்து கடையில் கிடைக்கும் இந்து உப்பு, வசம்பு, கிராம்பு, ஏலக்காய் ஆகியவற்றை மஞ்சள் துணியில் மூட்டையாக கட்டி வாசலில் கட்டுங்கள். சாம்பிராணி, திருநீறு, மஞ்சள் பொடி, ஒரு ரூபாய் நாணயம் மற்றும் கறி துண்டு ஆகியவற்றையும் சேர்த்து கட்டலாம். வசம்பை பச்சைக் கற்பூரத்துடன் கருக்கி நெற்றியில் திலகமாக இடுங்கள்.

கண் திருஷ்டிக்கான காரணம்:

எது நடந்தாலும், பாதி காரணம் நாமாகத்தான் இருப்போம். யாரும் ஸ்டேட்டஸ் வைக்கச் சொல்லவில்லை. நாம் பீத்திக்கொள்வதுதான் எல்லா பிரச்சனைக்கும் காரணம்.

வேலைக்கு செல்லும் பெண்களுக்கான பாதுகாப்பு:

வேலைக்கு செல்லும் பெண்கள், பயப்படாமல் தைரியமாக இருக்க வேண்டும். இறைவன் நம்மைக் காப்பார் என்று நம்புங்கள்.

வீட்டில் சண்டை – கண் திருஷ்டி காரணமா?

கணவன் மனைவிக்குள் சண்டை வருவதற்கு கண் திருஷ்டி மற்றும் மாந்திரீகம் காரணமா இருக்க வாய்ப்புள்ளது. கல்யாணத்திற்கு முன்பு ஜாதகம் பார்த்து இருவருக்கும் ஒத்து வருமா என்று கணித்துக்கொள்ளுங்கள். கணவன் மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் உண்மையாக இருந்தால் பாதி பிரச்சனை குறையும்.

மயான பூஜை செய்வது உண்மையா?

மயானத்தில் பூஜை செய்வது உண்மைதான். ஆனால், கண் திருஷ்டிக்கு யாரும் மயானத்தில் பூஜை செய்ய மாட்டார்கள். அது சாதாரண பிரச்சனை. உயிருக்கே பாதிப்பு ஏற்படும் அளவிற்கு பில்லி, சூனியம், ஏவல், செய்வினை இருந்தால் மட்டுமே மயான பூஜை தேவைப்படும்.

கண் திருஷ்டிக்கு சுத்தி போடுவது:

முட்டை, எலுமிச்சை பழம், உப்பு ஆகியவற்றை சுத்தி போடுவது ஒரு எளிய முறை. அது இல்லையென்றால், கொட்டாங்குச்சியை கருக்கி, அதனுடன் ஒரு ரூபாய் நாணயம், எலுமிச்சை பழம், கல் உப்பு மற்றும் காய்ந்த மிளகாய் சேர்த்து சுத்தி போடலாம். மூன்று மாதத்திற்கு ஒரு முறை கடலில் குளிப்பது நல்லது. அடிக்கடி குலதெய்வம் கோயிலுக்கு சென்று வாருங்கள்.

எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வு:

உங்களுக்கு மன நிம்மதி இல்லை என்றால், வாராகி அம்மன் படம் அல்லது விக்கிரகம் வைத்து வழிபாடு செய்யுங்கள். வாராகிக்கு மாதுளை முத்துக்களை தேனில் கலந்து நெய்வேத்தியமாக படைக்கலாம்.

கண் திருஷ்டியிலிருந்து தப்பிக்க பல வழிகள் உள்ளன. ஆனால், தைரியமாக இருப்பது முக்கியம். உங்களுக்கு பெரிய பிரச்சனைகள் இருந்தால், வாராகி அம்மனை வழிபடுங்கள்.

மேலும் இது போன்ற ஆன்மீகம் மற்றும் மாந்திரீகம் சார்ந்த தகவல்களைப் பெற, எங்களது Indiaglitz.com தளத்துடன் இணைந்திருங்கள்.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.