Download App

வழிப்பறி நாடகமாடி வழக்கில் சிக்கிய தாய்லாந்து பெண்!

வைகாசி 26, 2025 Published by anbuselvid8bbe9c60f

தாய்லாந்தின் பட்டாயாவை சார்ந்த பெண் ஒருவர், தன் பிரிட்டன் ஆண் நண்பரிடம் பணம் பறிக்கும் நோக்கில் போலி புகார் கொடுத்து தற்போது வழக்கில் சிக்கியுள்ளார்.

பட்டாயாவின் தென்பகுதியிலுள்ள சூப்பர் மார்க்கெட் ஒன்றில் வேலை பார்க்கும் 32 வயது ரட்டினா தன் மகளுடன் தனியே வசித்து வருகிறார்,

பிரிட்டன் ஆண் நண்பர் ஒருவருடன் உறவில் இருக்கும் இவர் நேற்று மாலை பதட்டத்துடன் காவல் நிலையத்துக்கு வந்தார்.

தான் பணி முடிந்து திரும்பிக் கொண்டிருந்த போது போதைக்கு அடிமையான மூன்று பேர் கொண்ட ஒரு கும்பல் தன்னை தாக்கி தன்னிடமிருந்த 32000 பாத் மற்றும் ஒரு மோதிரம் ஆகியவற்றை பறித்து விட்டு ஓடிவிட்டதாக புகார் ஒன்றை அளித்தார்.

புகாரை விசாரித்த அதிகாரிகள் ரட்டினா குறிப்பிட்ட பகுதிகளிலுள்ள சி சி டி வி காட்சிகளை பரிசோதித்த போது அவவாறு எந்த சம்பவமும் நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் தென்படவில்லை. இதனால் ரட்டினா மீது சந்தேகம் கொண்ட அதிகாரிகள் அவரை விசாரணைக்கு வருமாறு  அழைத்தனர்.

ஆனால் விசாரணைக்கு ஒத்துழைக்காமல், ரட்டினா விசாரணையை தவிர்ப்பது போல நடந்து கொண்டார். ஆனாலும் விடாத காவல்துறையினர் அவர் மீது தீவிர விசாரணையை துவங்க வேறு வழியின்றி தன் குற்றத்தை ஒப்புக்கொண்ட ரட்டினா, தான் பொய்யான புகாரை தந்து விட்டதாகவும் தன்னை மன்னித்து விடுமாறும் கோரினார்.

அதாவது பிரிட்டன் ஆண் நண்பரிடம் பணம் பெறும் நோக்கிலேயே ரட்டினா இவ்வாறான புகார் ஒன்றை கொடுத்திருக்கிறார். ஆனால் இப்பொது இந்த விஷயம் பிரிட்டிஷ் நண்பருக்கு தெரிய வர அவர் ரட்டினாவுடனான தன் உறவை துண்டித்து விட்டாராம்.

தற்போது இந்த பொய் புகாரிம் அடுத்த கட்டமாக ரட்டினா மீது ’காவல் துறையை தவறாக வழி நடத்த முயன்றதாகவும்’ ’தங்கள் நேரத்தை வீணடித்து விட்டதாகவும்’ வழக்குகளை பதிவு செய்திருக்கிறது தாய்லாந்து காவக்துறை!

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.