தாய்லாந்து விடுதியில் ரெபேக்கா இறந்த மர்மம் ?
வைகாசி 29, 2025 Published by anbuselvid8bbe9c60f
பிரிட்டனை சார்ந்த ரெபேக்கா என்ற 36 வயது பெண் தன் ஆண் நண்பருடன் லாவோஸில் நடைபெற இருந்த தன் தோழியின் திருமணத்திற்காக வந்தபோது தாய்லாந்தின் ஒரு விடுதியில் இறந்து கிடந்தனர்.
போதைப் பழக்கம் உடைய ரெபேக்கா பாங்காக் தெருக்களில் கோகைன் பாக்கெட் ஒன்றை வாங்கி வந்து அதை நண்பருடன் சேர்ந்து பயன்படுத்திய சற்று நெரத்தில் இரத்தத்தில் நஞ்சு பரவி இருவரும் உயிரிழந்தனர்.
பிற்பகலில் அவர்களைத் தேடி விடுதிக்கு வந்த நண்பர்கள் அவர்கள் இருவரும் அறைக்குள் சடலமாக கிடப்பதைக் கண்டனர்.
பிரேத பரிசோதனையில் இருவரது ரத்தத்திலும் ஓபியேட்ஸ், மார்பின், கோடீன், நோஸ்காபைன், பென்சோடியாசெபைன், டெமாசெபம், லோராசெபம், டயஸெபம் மற்றும் ஹெராயின் போன்ற கொடிய வேதிப்பொருட்கள் அவர்களின் இரத்தத்தில் கலந்திருந்தது தெரியவந்தது.
கோகைன் என்ற பெயரில் அவர்கள் வாங்கியது மிகக் கொடிய விளைவுகளை ஏற்படுத்தும் போதைக் கலவை என்பது அதிர்ச்சியளிக்கும் தகவலாகும்.
லண்டனில் வசிக்கும் ரெபேக்காவின் தாய் அனிதா டர்னர் தனது மகளின் மரணத்திற்கான காரணத்தை தேடி மூன்று முறை தாய்லாந்துக்கு வந்து போய் விட்டார். தற்போது ரெபேக்கா நினைவாக ஏழை மாணவர்களுக்கும் கைவிடப் பட்டவர்களுக்கும் உதவிகள் செய்து வரும் அவர் ‘தாய்லாந்துக்கு சுற்றுலா வருபவர்கள் இங்கு சாலையோரம் கிடைக்கும் மலிவான போதைப் பொருட்களை வாங்கி வாழ்க்கையை தொலைக்காதீர்கள்.. பாங்காக்கில் காவல் நிலையம் அருகேயுள்ள தெருக்களிலேயே சட்ட விரோத போதைப் பொருட்கள் கிடைக்கின்றன.. இந்த தெருவில்தான் அதிகமான மரணங்கள் நடக்கின்றன. பலமுறை சொல்லியும் இங்குள்ள போலிஸ் அதன் மேல் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை..எனக்கு ஏற்பட்டிருக்கிற துயரம் இனி யாருக்கும் வரக்கூடாது’ என்று குற்றம் சாட்டியுள்ளார்.












