Download App

காதலின் வேகம்: காவலர்கள் காயம்!

ஆனி 4, 2025 Published by anbuselvid8bbe9c60f

முதல் முதலாக காதலியை காரில் அழைத்துக் கொண்டு  போனவர் போலீசை கண்டதும் வேகத்தை அதிகப்படுத்தியதால் போலீஸ் காரில் மோதி அடுக்கடுக்காக விபத்துகளை நடத்தி இப்போது கம்பி எண்ணிக் கொண்டிருக்கிறார்.
இங்கிலாந்தில் நார்த்தம்ப்ரியா பகுதியில் மஸ்யர் அஸார்போன்யாட் என்ற 20 வயது இளைஞர் தனது காதலியுடன் அதிவேகமாகச் சென்ற போது தடுத்து நிறுத்திய போலீஸ் காரின் மீது மோதி அடுத்தடுத்து ஐந்து போலீஸ்கார்களை உருட்டி விபத்துக்குள்ளாக்கினார்.
விபத்தில் காயமடைந்த ஏழு அதிகாரிகள் மருத்துவமனையில் சிகிட்சை பெறுகின்றனர். போலீஸ் கார் ஒன்றின் மேல் பகுதி உடைந்து தூள்தூள் ஆனதில் அந்த பகுதி முழுவதும் நொறுங்கிய கார் பகுதிகள் சிதறிக் கிடந்தன. 
விபத்துக்குள்ளான காவலர்களில் மூன்று பேர் பணிக்குத் திரும்பி விட்டதாகவும், மற்றவர்கள் விடுப்பில் உள்ளதாகவும் நார்த்தம்ப்ரியா காவல்துறை தெரிவித்தது. 
நியூகாஸில் க்ரவுன் நீதி மன்றத்தில் அஸார்பான்யாட் தன்னுடைய போக்குவரத்து விதி மீறல்களை ஒப்புக் கொண்டதுடன், காப்பீடு இல்லாத நிலையில் கார் ஓட்டியதையும், காவலர்களுக்குக் கட்டுப் பட்டு காரை நிறுத்த தவறியதையும் ஒப்புக் கொண்டார். 
வரம்பு மீறிய வேகத்தில் சரியான முன்  விளக்குகள் இல்லாமல் அவர் வண்டியோட்டியதால் தடுத்து நிறுத்த முற்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். காரை ஒரு முறை நிறுத்திய அஸார், அதிகாரி நெருங்கி வந்ததும் திடீரெனெ காரைத் திருப்பி வேகமெடுத்ததாகவும் சொல்லப்படுகிறது.
இரண்டு மூன்று முறை, போலீஸ் நெருங்கியதும் அஸார் காரின் வேகத்தை அதிகரித்து போக்குக் காட்டியதாகத் தெரிகிறது.
போலீஸ் கார்களுடன் ஏற்பட்ட மோதல்களுக்குப் பிறகு தான் அவர் காரை நிறுத்தி இருக்கிறார். அவரும், அவரது காதலியும் எந்த காயமுமின்றி தப்பித்தனர். 
அந்த பெண் எந்த நிபந்தனையுமின்றி விடுவிக்கப் பட்டார். அஸார் கைது செய்யப் பட்டு பின்னர் கடுமையான நிபந்தைனைகளுடன் பெயிலில் விடுவிக்கப் பட்டார். ஆனால், அவரை விதி விடவில்லை.
ஒரு சில நாட்களிலேயே திரும்பவும் அவர் சிவப்புநிற ஹுண்டாய் i10 காரில் நியூகாஸில்  பகுதியில் அதிவேகத்தில் செல்வதாக அதிகாரிகளுக்கு செய்தி வந்தது.
இம்முறை கைது செய்யப் பட்ட அஸார் ஆபத்தான வேகம், காவலர்களின் ஆணையை மீறி வண்டியை நிறுத்தாத குற்றம், காப்பீடு மற்றும் தேவையான ஆவணங்கள் இல்லாமை, ஆகிய குற்றங்களின் கீழ் கைது செய்யப்பட்டு ஒரு வருடமும் இரண்டு மாதமும் சிறத் தண்டனை அளிக்கப் பட்டு, இளம் குற்றவாளிகளுக்கான  சிறையில் அடைக்கப் பட்டார்.
மேலும், அவருக்கு மூன்று ஆண்டுகள், ஏழு மாதங்களுக்கு வண்டி ஓட்டுவதற்கு தடை விதிக்கப் பட்டுள்ளது. அசார்போனியாட் இனி வாகனம் ஓட்ட விரும்பினால், அவர் மீண்டும் தேர்வெழுதி உரிமம் பெற்ற பின்னரே ஓட்டமுடியும். 
“இவர் யாரையும் கொல்லாமல் விட்டது மிகப் பெரிய அதிர்ஷ்டம் தான்” என்று காவல் அதிகாரி பில்லி முல்லிகன் தெரிவித்தார்.

More News

Trending Now

No trending articles in this category from the last 3 days.