‘லக்கி பாஸ்கர்’ ஹீரோவுக்கு ஷாக்: பிரியாணி வழக்கில் சிக்கிய துல்கர்!
கார்த்திகை 5, 2025 Published by anbuselvid8bbe9c60f

தென்னிந்திய சினிமாவின் டாப் ஹீரோக்களில் ஒருவர்தான் துல்கர் சல்மான். மலையாளத்துல அறிமுகமானவர் என்றாலும், தமிழ், தெலுங்குனு எல்லா மொழிகளிலும் தொடர்ந்து ஜொலிச்சிட்டு வராரு.
இவரோட கடைசி ரிலீஸ் ‘லக்கி பாஸ்கர்’ – ரொம்ப பெரிய ஹிட்! இப்போ தெலுங்கு டைரக்டர் பவன் சாதினேனி இயக்கத்துல ஒரு புதுப்படத்துல நடிச்சிட்டு இருக்காரு. படத்தோட டைட்டில் ‘ஆகாசமோல் ஓகா தாரா’னு வச்சிருக்காங்க.
துல்கர் கேரளாவைச் சேர்ந்த ஒரு பிரபலமான பிரியாணி அரிசி பிராண்டுக்கு அம்பாசடரா இருக்காரு. ஆனா இப்போ அந்த பிராண்ட் பெரிய சிக்கலுல மாட்டியிருக்கு.
பத்தனம்திட்டா மாவட்டத்துல இருந்து ஒரு கேட்டரிங் கம்பெனி நுகர்வோர் நீதிமன்றத்துல கேஸ் போட்டிருக்கு. என்னனா, சமீபத்துல ஒரு கல்யாண விருந்துக்கு அந்த பிராண்டோட அரிசிய வாங்கி பிரியாணி செஞ்சிருக்காங்க. அத சாப்பிட்ட பல பேருக்கு உடம்பு சரியில்லாம போயிடுச்சு.

இதனால அரிசி கம்பெனி ஓனரும், அதோட அம்பாசடரான துல்கர் சல்மானும் கேஸுல இழுக்கப்பட்டிருக்காங்க. இருவருக்கும் நேரில ஆஜராகணும்னு நோட்டீஸ் அனுப்பி இருக்காங்க.
இது துல்கருக்கு சினிமா கேரியர்ல ஒரு எதிர்பாராத ட்விஸ்ட் மாதிரி ஆயிடுச்சு!
























