Download App
காக்கி சர்க்கஸ்

Kaakee Circus

Cast: Subash Selvam, Munishkanth, Rajesh Madhavan, Gowthami, Vinsu Rache, Savithri, Amrudha, Abdul Lee, Maruthupandiyan, Rakesh Ushar, Vigneshwar, Arunkumar Pavumba, Chiththirasenan

Director: Ameen Barif

Music Director: Vibin Baskar

Producer: Sreenidhi Sagar

Banner: Rise East Entertainment

Release Date: April 10, 2026

காக்கி சர்க்கஸ் திரை விமர்சனம்

Published சித்திரை 13, 2026 by Natarajan Karuppiah

காக்கி சர்க்கஸ் : கத்தியின்றி ரத்தம் இன்றி ஒரு குற்றவியல் கதை!

அமீன் பரீஃப் இயக்கத்தில் முனீஸ்காந்த், ராஜேஷ் மாதவன், சுபாஷ் செல்வம் ஆகியோர் நடிப்பில் ஜீ5 ஓடிடி தளத்தில் ரிலீஸ் ஆகி இருக்கும் வெப் தொடர் “காக்கி சர்க்கஸ்” .

குற்றவாளிகளை திருத்தும் இடம் சிறை தான் என வெகுவாக நம்புகிறார் துணைச் சிறைச்சாலை கண்காணிப்பாளர் அன்புச்செல்வன் ( முனுஷ் காந்த்) . எனவே சிறைச்சாலையில் சிறிய நூலகம் அமைத்து புத்தகங்கள் கொடுத்து கைதிகளுக்கு நல்ல அறிவுரைகளை கொடுத்து வருகிறார். இவருடன் காவலர் அர்ஜுன் ( சுபாஷ் செல்வம்). இதற்கிடையில் சிறைக்குள் இருக்கும் கோவில் உண்டியலில் இருக்கும் பணம் திருடு போகிறது. அந்தப் பணத்தை யார் எடுத்தார் என தேடல் படலம் தொடர்கிறது. ஆனால் யாருக்கும் தெரியாமல் திருடு போன பணத்தை மீண்டும் உண்டியலில் சேர்க்க நினைக்கும் அர்ஜுன் கடன் வாங்கி உண்டிகளில் பணத்தை சேர்க்கிறார். ஆனால் அதுவும் திருட போகிறது. முடிவு என்ன? பணத்தை கண்டுபிடித்தார்களா? யார் திருடன் என்பது மீதி கதை ?

பொருத்தமான பெயர் ” காக்கி சர்க்கஸ் “, காக்கி யூனிஃபார்மை வைத்து சுற்றி இருப்பவர்கள் ஆடும் ஆட்டம் தான் கதை. அதை காக்கி யூனிபார்ம் எப்படி சமாளிக்கிறது என்கிற நோக்கத்தில் கதையை எழுதி இயக்கியிருக்கிறார் அமீன் பரீஃப். விசாரணை , சிறை, காவல் துறை என இப்படியான கதைகளை ரத்தம் , வன்முறை இல்லாமல் எடுப்பது கடினம். ஆனால் இந்த கதையை மிகவும் எளிமையாக அதே சமயம் சுவாரசியமாகவும் கொடுத்திருக்கிறார் இயக்குனர் அமீன்.

கதைக்கு மிக முக்கிய கதாபாத்திரங்களாக முனிஷ்காந்த், சுபாஷ் செல்வம், மற்றும் ராஜேஷ் மாதவன் ஆகியோர் அற்புதமான நடிப்பை வழங்கி திரைக்கதையை விறுவிறுப்பாக நகர்த்தி இருக்கிறார்கள். இயக்குனர் அமீன் மலையாள சினிமா உலகில் இருந்து வந்தவர் என்பதாலேயே கதைக்களம் எளிமையாக அதேசமயம் சுவாரஸ்யமும் , விறுவிறுப்பும் கலந்து நகர்கிறது.

விஷுவலில் நிஜமான சர்க்கஸ் கொடுத்திருக்கிறார் ஒளிப்பதிவாளர் நீரஜ் ரெவி, அதற்கு கச்சிதமான பின்னணி இசை கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் விபின் பாஸ்கர்.

மொத்தத்தில் ” காக்கி சர்க்கஸ்” , கத்தி இன்றி ரத்தம் இன்றி ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லர் பார்க்க நினைப்போர் இந்த வெப்தொடருக்கு டிக் செய்யலாம் .

Rating: (3/5)

[lai_inner_right_top]

More News

No categories found.