ஜி.வி.பிரகாஷ் மீண்டும் தெலுங்கில் அதிரடி!
கார்த்திகை 21, 2025 Published by anbuselvid8bbe9c60f

தமிழ் சினிமாவின் இளம் தேசிய விருது பெற்ற இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் குமார் தெலுங்கு திரையுலகிலும் தனது இசை மந்திரத்தை தொடர்ந்து வீசி வருகிறார். தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் சுதா கொங்கரா இயக்கும் ‘பராசக்தி’ படத்திற்கு இசையமைத்து மும்முரமாக இருக்கும் ஜி.வி., மற்றொரு தெலுங்கு ப்ராஜெக்ட்டில் ஒப்பந்தமாகியிருக்கிறார்.
அஜய் பூபதி இயக்கத்தில் உருவாகும் புதிய படம் தற்காலிகமாக AB4 என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இதில் கட்டமனேனி ஜெயகிருஷ்ணா கதாநாயகனாக நடிக்க, ‘KGF’ பட நடிகை ரவீனா தாண்டனின் மகள் ராஷா ததானி கதாநாயகியாக அறிமுகமாகிறார். சந்தமாமா கதலு பிக்சர்ஸ் சார்பில் ஜெமினி கிரண் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைக்கிறார் என படக்குழு அதிகாரப்பூர்வ வீடியோ வெளியிட்டு உறுதி செய்துள்ளது.

ஏற்கனவே தெலுங்கில் வருண் தேஜ் நடித்த ‘மட்கா’, ‘ராபின்ஹுட்’, ‘லக்கி பாஸ்கர்’ ஆகிய படங்களுக்கு இசையமைத்து பிளாக்பஸ்டர் ஹிட் தந்திருக்கும் ஜி.வி., தொடர்ந்து தெலுங்கு தயாரிப்பாளர்களின் டாப் சாய்ஸாக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரவீனா தாண்டனின் மகள் ராஷா ததானியின் தெலுங்கு டெப்யூ + அஜய் பூபதியின் அதிரடி இயக்கம் + ஜி.வி.பிரகாஷின் பின்னணி இசை என AB4 படத்திற்கு எதிர்பார்ப்பு இப்போதே உச்சத்தில் ஏறத் தொடங்கியுள்ளது!
























